மாவட்ட செய்திகள்

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது + "||" + A young man arrested under the POCSO act

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே மணியாரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஜயகுமார் (வயது 23). இவர், 17 வயது பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், தேனி குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல குழு தலைவர் சுரேஷ்குமார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
கரூரில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
3. சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5. பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.