995 பேருக்கு கொரோனா தொற்று


995 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 8 Jun 2021 10:24 PM IST (Updated: 8 Jun 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 995 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி 18 பேர் பலியானார்கள்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 995 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி 18 பேர் பலியானார்கள்.
குறைந்து வருகிறது
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலை மாறி தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. 
நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொண்டதன் விளைவாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.
995 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக நேற்று பதிவாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
18 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 864 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 659 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்து 969 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 60 வயது பெண், 60 வயது ஆண், 49 வயது ஆண், 55 வயது பெண், 72 வயது பெண், 77 வயது ஆண், 74 வயது ஆண், 89 வயது ஆண், 62 வயது ஆண், 79 வயது ஆண், 72 வயது ஆண், 69 வயது பெண், 83 வயது ஆண், 80 வயது ஆண், 58 வயது பெண், 63 வயது ஆண், 70 வயது பெண், 64 வயது பெண் என 7 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்துள்ளது.

Next Story