ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்


ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 8 Jun 2021 10:29 PM IST (Updated: 8 Jun 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்.

மதுரை,ஜூன்.
கர்நாடகாவில் இருந்து ரெயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்.
ரெயிலில் கடத்தல்
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் அல்லாடி வருகின்றனர். இதற்கிடையே, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபான பாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து, மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். ஆரம்பத்தில் கண்டும் காணாமல் இருந்த இந்த விவகாரம் தற்போது பெரிய அளவிலான வியாபாரமாக மாறிவிட்டது. அதனை தொடர்ந்து, ரெயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் மதுபான பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, வெளிமாநில ரெயில்கள் கண்காணிக்பட்டு வருகிறது.
மைசூர் எக்ஸ்பிரஸ்
அதன்படி, மைசூரில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை மதுரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலையாண்டி தலைமையில் குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, எஸ்-9 மற்றும் 10-வது பெட்டிகளில் 2 நபர்கள் மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.10,800 மதிப்புள்ள 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒப்படைப்பு
இதையடுத்து, அவர்களை கைது செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், இது குறித்து மதுரை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட 2 நபர்களும், கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்களும் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Next Story