தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு
சங்கராபுரத்தில் தனிமை படுத்தப்பட்ட பகுதியில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் தேர்வுநிலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து சங்கராபுரம் பகுதியில் நோய் தொற்று காரணமாக தனிமை படுத்தப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தனிமை படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
மேலும் வெளிநபர்கள் உள்ளே செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும். குறிப்பாக தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் கசுாதாரப்பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது இளநிலை உதவியாளர்கள் வைத்திலிங்கம், சரவணன், பதிவறை எழுத்தர் வெங்கடேசன், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story