கோவையில் 2439 பேருக்கு கொரோனா
கோவையில் 2439 பேருக்கு கொரோனா
கோவை
கோவையில் நேற்று 2,439 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 44 பேர் பரிதாபமாக இறந்தனர். நீலகிரியில் 5 பேர் இறந்தனர்.
கொரோனா பலி
கோவை மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை மட்டும் குறையாமல் உள்ளது.
இந்த நிலையில் கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 44 பேர் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் பலியாகினர்.
ஆனால் சென்னையில் நேற்று கொரோனாவுக்கு 42 பேர் இறந்தனர். இதன் மூலம் சென்னையை விட கோவையில் நேற்று இறப்பு அதிகமா னது குறிப்பிடத்தக்கது. கோவையில் இதுவரை கொரோனாவிற்கு 1,576 பேர் இறந்து உள்ளனர்.
2439 பேருக்கு தொற்று
கோவையில் நேற்று ஒரே நாளில் 2,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 93 ஆயிரத்து 37 ஆக உயர்ந்து உள்ளது.
கோவையில் புதிய உச்சமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 4,917 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்மூலம் கோவையில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 710 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றுக்கு 26 ஆயிரத்து 751 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா பாதிப்பு, பலி, குண மடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஆகியவற்றில் நேற்று கோவை மாவட்டம் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்த நிலையில் நேற்று புதிதாக 498 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 370 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று 587 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 19 ஆயிரத்து 42 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் இதுவரை 124 பேர் இறந்துள்ளனர்.
4 ஆயிரத்து 204 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் மொத்தம் 354 ஆக்சிஜன் படுக்கைகளில் 315 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 39 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருக்கிறது.
Related Tags :
Next Story