மாவட்ட செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் + "||" + protest

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியினர், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதை கண்டித்தும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை, தமிழக அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், கொரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பூதட்டியப்பா, நகர செயலாளர் சலாம்பேக் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தளி சட்டசபை தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் நாகராஜ் மற்றும் மாரப்பா, பிரசாந்த்கவுடா, கிருஷ்ணன், நிக்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கெலமங்கலம், லக்கம்பட்டி
கெலமங்கலம் பஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கே.வி.நாகராஜ் முன்னிலை வகித்தார். கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, துணை தலைவர் சீனிவாஸ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி சியாமளா, விவசாய சங்க பிரதிநிதி குட்டி என்ற முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை ஒன்றியம் லக்கம்பட்டி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சேகர், ஒன்றிய தலைவர் சுபாஸ் சந்திரபோஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞானம் மற்றும் கலைக்கோவன் பரதன், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி, பர்கூர்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். இதில், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் சங்கர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சுபத்ரா, பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் துரை, ஏ.ஐ.டி.யு.சி. பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கண்ணு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சந்திரசேகர், ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பவுன்ராஜ், முனிசாமி, திருப்பதி, ராஜாமணி, சக்கரவர்த்தி, சென்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், ராஜேந்திரன் நன்றிகூறினார்.
காவேரிப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சுபத்ரா, பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் துரை, ஏ.ஐ.டி.யு.சி. பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.
2. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.