வாலிபருக்கு அரிவாள் வெட்டு
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
பொன்னமராவதி, ஜூன்.9-
பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள ஒலியமங்கலம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் வினோத் (வயது 24). சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story