நொய்யல் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து தூய்மை பணியாளர்கள் 2 பேர் பலி


நொய்யல் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து  தூய்மை பணியாளர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 8 Jun 2021 11:21 PM IST (Updated: 8 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்து தூய்மை பணியாளர்கள் 2 பேர் பலி

பேரூர்

கோவை அருகே நொய்யல் ஆற்றில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் தூய்மை பணியாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொரோனா தடுப்பு பணி

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே இக்கரைபோளுவாம் பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்க்கும் 8 பேர் நேற்று மதியம் கொரோனா தடுப்பு தூய்மை பணியில் ஈடுபட்ட னர்.‌ 

அங்கு கிருமிநாசினி, பிளிச்சிங் பவுடர் போடும் பணி முடிந்த நிலையில் போளுவாம்பட்டியை சேர்ந்த பழனி (வயது 65), மாரிமுத்து (55), அம்மாவாசை (55), செல்வி (50), கமலம் (55), செம்மேட்டைச் சேர்ந்த அருக்காணியம்மாள் (55), ராஜம்மாள் (75), பழனிச்சாமி (52) ஆகிய 8 பேரும் குப்பை அள்ளும்‌ பேட்டரி ஆட்டோவில் ஆலாந்துறையில் இருந்து சிறுவாணி மெயின் ரோட்டின் வழியே போளுவாம்பட்டி ஊராட்சி அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆட்டோ கவிழ்ந்தது

அந்த வாகனத்தை இக்கரைபோளுவாம்பட்டி சின்னாறு பகுதியை சேர்ந்த ராசு (50) என்பவர் ஓட்டினார். ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திரும்பி ஊராட்சி அலுவலகம் நோக்கி  ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது, நொய்யல் ஆற்று பாலம் அருகே எதிரே வாகனம் வந்தது. 


உடனே டிரைவர் பிரேக் போட்டார். இதனால்  ஆட்டோ திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியது.

இதனால் அதில் இருந்த பணியாளர்கள் கூச்சல் போட்டனர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ பாலத்தின் பக்கவாட்டில் இருந்து 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.

2 பேர் சாவு

இதில், பழனி (65) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தார். படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 8 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஆனால் செல்லும் வழியிலே யே செம்மேட்டை சேர்ந்த பழனிச்சாமி (வயது 52) பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ராசு, மாரிமுத்து, அம்மாவாசை, செல்வி, கமலம், அருக்காணியம்மாள், ராஜம்மாள் ஆகிய 7 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதையடுத்து ஆற்றில் கவிழ்ந்த ஆட்டோ மீட்கப்பட்டது. இது விபத்து தொடர்பாக ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story