கபர்ஸ்தான் வழித்தடம் அடைப்பு


கபர்ஸ்தான் வழித்தடம் அடைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2021 11:26 PM IST (Updated: 8 Jun 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

கபர்ஸ்தான் வழித்தடம் அடைப்பு

கோவை 

கோவை மைல்கல் பகுதியில் கபர்ஸ்தான் வழித்தடம் அடைக்கப்பட் டது. எனவே அங்கு தனிப்பாதை அமைத்து கொடுக்க அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

கபர்ஸ்தான் வழித்தடம்

கோவை மைல்கல் பகுதிகளில் முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் (இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம்) கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதில் தேவையான வசதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்து கொடுத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கபர்ஸ்தானுக்கு செல்லும் வழித்தடத் தில் குழி தோண்டி கற்களை போட்டு சிலர் அடைத்தனர். இதனால் அங்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டனர். அவர்கள், இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இது பற்றி வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் ஆய்வு

உடனே அமைச்சர் ராமச்சந்திரன் விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார். அவர், வழித்தடத்தை அடைத்து வைக்கப்பட்டு இருந்த கற்களை அகற்ற உத்தரவிட்டார்.

 10 நாட்களில் மாநகராட்சி சார்பில் கபர்ஸ்தானுக்கு செல்ல தனிபாதை அமைத்துக் கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால் கபர்ஸ்தான் வழித்தட பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது.

இதற்கான முயற்சிகளை த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், மற்றும் குனியமுத்தூர் சுன்னத் ஜமாத், சுகுணாபுரம் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.


Next Story