பால் பாக்கெட் போடுவது போல குட்கா சப்ளை
தேவகோட்டையில் பால்பாக்கெட் போடுவது போல குட்கா சப்ளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை வே.தே.தெருவில் வசிப்பவர் ராஜசேகர்.இவரது மகன் பிரவீன்குமார் (வயது 26). இவர் மோட்டார் சைக்கிளில் பால் பாக்கெட் போடுவதுபோல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்களை மறைத்து கொண்டு கிராமங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேவகோட்டை செக்போஸ்ட் அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சோதனையில் பிரவீன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது குட்கா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story