கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.40 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.40 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் தெரிவித்தார்.
ஓசூர்:
தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் நேற்று மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதனை சேலம் சரக மதுவிலக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரங்கின்போது வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் மாநில எல்லைகளில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே காய்கறி, பழங்கள் ஆகியவற்றை ஏற்றி வந்த சரக்கு வாகனங்களில் மறைத்து வைத்து மதுப்பாட்டில்கள் கடத்தப்பட்டது. இதனை கண்டறிந்து கடந்த ஒரு மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுபாட்டில்களை கடத்தியதாக 86 பேர் கைது செய்யப்பட்டு, 40 நான்கு சக்கர வாகனங்கள், 80 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story