இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர். சத்திரத்திற்கும், கம்பிப்பாடுக்கும் இடைப்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில் இறந்த நிலையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட ஆமை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இறந்து கரை ஒதுங்கி கிடந்த அந்த ஆமையை கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் அதன் தலைப் பகுதியை மற்றும் உடல் பகுதியை கடித்து குதறி உள்ளது. இதனால் கடற்கரை பகுதியில் அலங்கோலமான நிலையில் கிடந்தது. வனத்துறையினர் இந்த ஆமையை உடனடியாக குழிதோண்டிப் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story