கம்பைநல்லூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற விவசாயி கைது


கம்பைநல்லூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 11:51 PM IST (Updated: 8 Jun 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

கம்பைநல்லூர் அருகே சாராயம் காய்ச்சி விற்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

மொரப்பூர்,

கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், ராஜாமணி மற்றும் போலீசார் கம்பைநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது வெதரம்பட்டி ராமலிங்க நகரை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் என்பவர் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சிவலிங்கம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 10 லிட்டர் சாராயம், 100 லிட்டர் ஊறல் ஆகியவற்றை போலீசார் அழித்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story