இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாயமங்கலம், இலங்கை தமிழர்கள் முகாம், கோட்டையூர், வாணி, இளமனூர், பெரும்பச்சேரி ஆகிய இடங்களில் உள்ள முன்களப்பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், சைமன், மகேஸ்வரன், சத்தியேந்திரன், மலைச்சாமி, துரைமுருகன், மு.சத்தியேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி நிவாரண பொருட்களை வழங்கி பேசினார்.