வெங்காய பயிர்களை சாப்பிடும் புழுக்கள்


வெங்காய பயிர்களை சாப்பிடும் புழுக்கள்
x
தினத்தந்தி 9 Jun 2021 12:15 AM IST (Updated: 9 Jun 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் அருகே வெங்காய பயிர்களை புழுக்கள் சாப்பிட்டு வருகின்றன. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குண்டடம்
குண்டடம் அருகே  வெங்காய பயிர்களை புழுக்கள் சாப்பிட்டு வருகின்றன. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெங்காயத்தை சாப்பிடும் புழுக்கள்
குண்டடத்தை அடுத்துள்ள முத்துக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு விவசாயி இவர் தனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் நடவு செய்திருந்தார். இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்தது. 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயிரில் பேன்கள் மற்றும் ஆங்காங்கே புழுக்கள் தென்பட்டதால் அதற்காக பூச்சி மருந்தை அடித்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் வயலில் பார்த்தபோது பேன்கள், புழுக்கள் தென்படவில்லை.
நேற்று காலை வெங்காய வயலை பார்க்க சென்றவருக்கு பேரதிர்ச்சி. வயலில் இருந்த பயிர்களில் பெரும்பகுதி சருகாகிக் கிடந்தது. உற்றுப் பார்த்தபோது ஒவ்வொரு பயிரிலும் 50-க்கும் மேற்பட்ட புழுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. மேலும் வயலின் ஓரங்கள், வரப்புகள் எங்கும் புழுக்கள் நெலிந்து  கொண்டிருந்தன. வெங்காய பயிரின் இலைகளில் மொய்த்த புழுக்கள் அதன் பச்சையத்தை முழுவதுமாக உரிஞ்சி, சருகாக்கி விட்டிருந்தன.
கடும் சேதம்
இதுபற்றி அந்த விவசாயி  கூறியதாவது:- 
வெங்காயப் பயிரில் புழுக்கள், பேன்கள் தாக்குவது சாதாரணமான ஒன்றாகும். புழுக்கள் அதிகளவில் பெருகினாலும் பயிருக்கு 2 அல்லது 3 புழுக்கள் தென்படும். அந்த புழுக்களும் பயிர்களை கடித்து துண்டிக்கும். ஆனால் இந்தப்புழுக்களோ பயிருக்கு 50-க்கும் மேல் மொய்த்து மேய்கின்றன. பயிரில் உள்ள பச்சையத்தை உரிஞ்சிவிடுவதால் வெங்காயம் விளைந்தது முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கடுமையான சேதமாகிவிட்டது.
வழக்கமாக புழுக்களுக்கான பூச்சி மருந்து அடித்தால் அடுத்த 10 நாட்களுக்கு புழுக்கள் வராது. ஆனால் இரண்டே நாட்களில் புழுக்கள் பெருகி வெங்காய பயிரை முழுமையாக சாப்பிட்டு விட்டது. இதனால் இந்த போகத்தில் பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. இது எந்த வகையான புழுக்கள் என்பதுபற்றி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நேரில் வயலுக்கு வந்து ஆய்வு நடத்தி மற்ற விவசாயிகளின் வயலுக்கு பரவாமல் தடுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story