கொரோனாவுக்கு மருத்துவ உதவியாளர் உள்பட 3 பேர் பலி
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் கொரோனாவுக்கு மருத்துவ உதவியாளர் உள்பட 3 பேர் பலியானார்கள். 144 பேருக்கு தொற்று உறுதியானது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் கொரோனாவுக்கு மருத்துவ உதவியாளர் உள்பட 3 பேர் பலியானார்கள். 144 பேருக்கு தொற்று உறுதியானது.
3 பேர் பலி
வால்பாறை அருகே உள்ள பெரியகல்லார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அனார்கலி (வயது 50). ஆஷா மருத்துவ திட்டத்தில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அதுபோன்று சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார்.
மேலும் கிணத்துக்கடவு அருகே கோவிந்தாபுரத்தை சேர்ந்த 50 வயது பெண் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
144 பேருக்கு தொற்று
அதுபோன்று பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை 8,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 4,422 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தொற்று பாதித்த 36 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீதிகள், சாலைகளை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 16 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப் பட்டது.
இந்த முகாமில் 879 பேர் கலந்துகொண்டு பயன் அடைந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story