ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து
பொள்ளாச்சி அருகே ஆனைமலை-சேத்துமடை ரோட்டில் உள்ள எல்.ஆர்.டி. பஸ் நிறுத்தத்தில் ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவை ரோடு சந்தே கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 35), காளியண்ணன்புதூரை சேர்ந்த சரவணக்குமார் (26), கோவில் பாளையம் ராஜூவ் நகரை சேர்ந்த பிரகாஷ் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
5 பேர் கைது
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் நெல்லிகுத்திபாறையை சேர்ந்த பாபு (30), ஆனைமலை ராஜூவ் நகரை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (24) ஆகியோரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சா, செல்போன்கள், ரூ.5,500, மோட்டார் சைக்கிள்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story