பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்


பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 9 Jun 2021 12:57 AM IST (Updated: 9 Jun 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையத்தில் த.மு.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நெல்லை, ஜூன்:
நெல்லை மேலப்பாளையத்தில் த.மு.மு.க. சார்பில், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பகுதி தலைவர் தேயிலை மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் காஜா, பெஸ்ட் ரசூல், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான், இளைஞரணி செயலாளர் ரியாஸ், ஊடக அணி செய்யது அப்துல் காதர், பகுதி துணை தலைவர் குதா முகம்மது, ம.ம.க. செயலாளர் சேக் மைதீன், பகுதி பொருளாளர் அசன் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை பகுதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அலிப் பிலால் ராஜா தலைமை தாங்கினார். நிர்வாகி பாளை.பாரூக், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story