ஆலங்குளம் அருகே உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்கள்
ஆலங்குளம் அருகே உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம், ஜூன்:
ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை துறை மூலம் நடத்தப்படும் கூட்டு பண்ணையம் திட்டத்தின் மூலம் வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு சுழல் கலப்பைகள் மற்றும் வைக்கோல் கட்டும் கருவி ஆகியவை அடங்கிய வேளாண் எந்திரங்களை ரூ.5 லட்சம் மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும், வேளாண்மை துணை இயக்குனருமான பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு வீராணம், மேலக்கலங்கல், வெங்கடேஸ்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் எந்திரங்களை வழங்கினார். மேலும் மேலக்கலங்கல் கிராமத்தில் மண் மாதிரி சேகரித்தல் முகாமிலும் கலந்துகொண்டு மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், வேளாண்மை அலுவலர் அருண்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி, செந்தில்குமார், கணேசன், வட்டார அட்மா தொழில்நுட்ப வல்லுனர்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story