தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.7 லட்சம் மோசடி
திருமணம் செய்வதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.7 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதக்:
திருமணம் செய்வதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.7 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் மூலம் காதல்
கதக் மாவட்டம் முண்டரகியை சேர்ந்தவர் 26 வயது பெண். இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு (2020) முகநூல் மூலமாக அந்த ஆசிரியைக்கு, ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூர் அருகே சோரூர் கிராமத்தை சேர்ந்த நேதாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை மாற்றி தினமும் பேசி வந்தனர்.
பின்னர் உப்பள்ளியில் வைத்து ஆசிரியையும், நேதாஜியும் சந்தித்து பேசி கொண்டனர். அப்போது அந்த ஆசிரியை திருமணம் செய்ய விரும்புவதாக நேதாஜி தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆசிரியையும் சம்மதம் தெரிவித்துள்ளார். தன் மீது அந்த ஆசிரியை மிகுந்த காதலுடன் இருப்பதை அறிந்த, நேதாஜி அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டார்.
ரூ.7 லட்சம் மோசடி
இதற்காக தனக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறி, ஆசிரியையிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த சில மாதங்களில் மடடும் ஆசிரியையிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை நேதாஜி வாங்கி இருந்தார். அதே நேரத்தில் ஆசிரியையிடம் பேசுவதை சமீப காலமாக நிறுத்திவிட்டார்.
மேலும் ஆசிரியை திருமணம் செய்யவும் நேதாஜி மறத்து விட்டார். அத்துடன் அவரிடம் வாங்கிய ரூ.7 லட்சத்தையும் நேதாஜி திரும்ப கொடுக்கவில்லை. மேலும் ஏராளமான பெண்களை திருமணம் செய்வதாக கூறி நேதாஜி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து முண்டரகி போலீஸ் நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேதாஜியை தேடிவந்தனர். இதனால் அவர் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நேதாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story