திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 37 பேர் கைது


திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 37 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 8:15 PM GMT (Updated: 8 Jun 2021 8:15 PM GMT)

பெங்களூரு அருகே திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவாகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டது.

பெங்களூரு:

பெங்களூரு அருகே திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவாகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டது.

ஐ.ஜி. பார்வையிட்டார்

பெங்களூரு புறநகர் மாவட்ட போலீசார், திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்திருந்தார்கள். 

அவர்களிடம் இருந்து நகைகள், பொருட்களை போலீசார் மீட்டு இருந்தனர். அவற்றை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நெலமங்களா போலீஸ் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர், பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சன்னன்னவர் பார்வையிட்டனர். பின்னர் மீட்கப்பட்ட நகைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஐ.ஜி. சந்திரசேகர் வழங்கினார். 

முன்னதாக போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

37 பேர் கைது

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள நெலமங்களா டவுன், புறநகர், மாதநாயக்கனஹள்ளி, தியாமகொண்டலு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 37 பேரை கைது செய்துள்ளனர்.

 கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பல்வேறு பகுதிகளில் திருடிய மற்றும் கொள்ளையடித்த ஒரு கிலோ 300 கிராம் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.16 லட்சம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 8 லட்சம் ஆகும். 

கைதானவர்கள் பெங்களூரு புறநகர் மாவட்டம் மட்டுமின்றி, பெங்களூருவிலும் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஐ.ஜி. சந்திரசேகர் கூறினார்.

Next Story