சிறுவர்களை மதுபானம் குடிக்க வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது

சிறுவர்களை மதுபானம் குடிக்க வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 1:49 AM IST (Updated: 9 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

சிறுவர்களை மதுபானம் குடிக்க வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது

ராமநகர்:

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கோடிஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மரலிபுரா கிராமத்தில் சிறுவர்களுக்கு இறைச்சி சாப்பாடு தருவதாக கூறி அழைத்து சென்ற சிலர், சிறுவர்களை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்ததுடன், போதையில் அவர்கள் நடனமாடுவதை வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தனர்.

 இந்த சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ், கரியப்பா, பிரமோத் ஆகிய 3 பேரும் ஈடுபட்டு இருந்ததும், அவர்கள் தலைமறைவாகி விட்டதும் போலீசாருக்கு தெரிந்தது.

 இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கணேஷ் மற்றும் கரியப்பா ஆகிய 2 வாலிபர்களையும் கோடிஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரான பிரமோத் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்ய கோடிஹள்ளி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Next Story