முககவசம் அணியாத, வாகனங்களில் சுற்றிய 299 பேர் மீது வழக்குப்பதிவு


முககவசம் அணியாத, வாகனங்களில் சுற்றிய 299 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 9 Jun 2021 2:02 AM IST (Updated: 9 Jun 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாத, வாகனங்களில் சுற்றிய 299 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

கரூர்
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியும், முககவசம் அணியாமலும் வெளியில் வந்தவர்கள் மீது நேற்று மட்டும் 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.34 ஆயிரத்து 400-ம், பொது இடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.16 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
மேலும், ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 126 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடந்த ஏப்ரல் 24-ந் தேதி முதல் நேற்று வரை முககவசம் அணியாதவர்கள் மீது சுமார் 10 ஆயிரத்து 999 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகையாக ரூ.21 லட்சத்து 99 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது 965 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-ம், விதிமுறைகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிந்தவர்கள் மீது சுமார் 3,074 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மது விற்பனை
 ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3  பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 48 மது பாட்டில்களும், 60 லிட்டர் சாராய ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 


Next Story