கொரோனாவுக்கு மேலும் 11 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 11 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 2:15 AM IST (Updated: 9 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்:

177 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 9,879 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 8,205 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 34 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 41 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 18 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 22 பேர், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு முடிவுகள் விடுபட்ட 62 பேர் என மொத்தம் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1,550 பேரில் 1,117 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளில் தனிமைப்படுத்தியும் வைக்கப்பட்டுள்ளனர்.
433 பேருக்கு சிகிச்சை
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிற்கு நேற்றைய அறிவிப்பின்படி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Next Story