மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 2:22 AM IST (Updated: 9 Jun 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர், 
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்திரப்பட்டியில் உள்ள ஒரு வங்கி அருகில் இருசக்கர வாகனத்தில் வைத்து மதுபாட்டில் விற்ற ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்த நீதிராஜ் (வயது 27) என்பவரிடம இருந்து போலீசார் 36 மதுபாட்டில் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அதே போல அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சாத்தூர் ரெயில்வே கேட் அருகில் மதுபாட்டில் விற்ற இலுப்பையூரணியை சேர்ந்த மகேஷ்வரன் (37) என்பவரிடம் இருந்து 15 மது பாட்டில் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story