வீடு புகுந்து 8½ பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 8½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 Jun 2021 2:29 AM IST (Updated: 9 Jun 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே வீடு புகுந்து 8½ பவுன் நகையை திருடி சென்றனர்.

விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி காமராஜ் காலனியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் ரவிச்சந்திரனின் உறவினரான கணேஷ்பாண்டி (30) என்பவர் நகைகளை திருடியதாக தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.

Next Story