சேலம் அருகே மெத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது


சேலம் அருகே மெத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது
x
தினத்தந்தி 9 Jun 2021 2:35 AM IST (Updated: 9 Jun 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மெத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சேலம்:
சேலம் அருகே மெத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தலைகுப்புற கவிழ்ந்தது
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு 30 டன் மெத்தனால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 38) என்பவர் ஓட்டினார்.
இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை பிரிவு ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தீயணைப்பு வீரர்கள்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் சங்ககிரியில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் போர்ம் (நுரை தகர்வு) கலந்து பீய்ச்சி அடித்தனர்.
டேங்கர் லாரியில் இருந்து மெத்தனால் கசிவு ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் லாரி டிரைவர் அசோக்குமார் காயமின்றி உயிர் தப்பினார். லாரியில் 30 டன் மெத்தனால் இருந்ததால் சிறிய அளவிலான கிரேன் மூலம் பலமணி நேரம் போராடியும் மீட்க முடியவில்லை. இதையடுத்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் லாரி மீட்கப்பட்டது. முன்னதாக லாரி மீட்கப்படும் போது தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் போர்ம் கலந்து தொடர்ந்து பீய்ச்சி அடித்துக்கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story