சேலம் இரும்பாலை வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர் கார்மேகம் ஆய்வு

சேலம் இரும்பாலை வளாகத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரம் கலெக்டர் கார்மேகம் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2021 2:35 AM IST (Updated: 9 Jun 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்:
சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500  படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று கலெக்டர் கார்மேகம், வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். 
முக கவசம்
இதையடுத்து அவர் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம் பகுதியில் உள்ள மளிகை கடையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடைக்கு முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்குவதுடன், கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story