1 மணி நேரம் பலத்த மழை


1 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 8 Jun 2021 9:07 PM GMT (Updated: 8 Jun 2021 9:07 PM GMT)

சாத்தூர், தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சாத்தூர், 
சாத்தூர், தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
பலத்த மழை 
சாத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தபின்பும் அதிகமான வெயில் வாட்டி வதைத்தது.
 இந்நிலையில் நேற்று காலை முதலே வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. சாத்தூர், அமீர் பாளையம், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, படந்தால், இருக்கன்குடி, கொல்லப்பட்டி, அய்யம்பட்டி, அணைக்கரைப்பட்டி, ராமலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
பொதுமக்கள் மகிழ்ச்சி 
இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த மழையினால் தெருக்களில் மழை நீர் ஆறாக ஓடியது.
 நகர் பகுதிகளில் பெய்த மழையால் மழை நீர் வடிய வாருகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். 
தாயில்பட்டி 
அதேபோல தாயில்பட்டியை அடுத்த விஜயகரிசல்குளம், ரெட்டியாபட்டி, பேர்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
மேற்கண்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள   சூரியகாந்தி, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 
விருதுநகர் 
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிவரை விருதுநகரில் மட்டும் 11.96 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறண்ட நிலையே காணப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Next Story