மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி 2 பெண்கள்-சிறுவன் பலி + "||" + death

மின்னல் தாக்கி 2 பெண்கள்-சிறுவன் பலி

மின்னல் தாக்கி 2 பெண்கள்-சிறுவன் பலி
சாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற ேபாது மின்னல் தாக்கி 2 பெண்கள் மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற ேபாது மின்னல் தாக்கி 2 பெண்கள் மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். 
கோவிலுக்கு சென்றனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நள்ளி கிராமத்தை சேர்ந்தவர், சோலைராஜ். அவருடைய மனைவி சண்முகசுந்தரவள்ளி (வயது 56).
இதே கிராமத்தை சேர்ந்த சோலையப்பன் மகன் கருப்பசாமி (16), மாரிமுத்து மனைவி மாரியம்மாள் (60), முனியசாமி மகன்  மாரிகணேஷ் (13), கருப்பசாமி மனைவி தங்கமாரியம்மாள் (45), கன்னியம்மாள் (45) ஆகிய 6 பேர் சேர்ந்து அதே கிராமத்தில் காட்டுப்பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று மாலை சென்றனர். 
மின்னல் தாக்கி 3 பேர் பலி 
அப்போது அந்த பகுதியில் பலத்த மின்னலுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கியதில் சண்முகசுந்தரவள்ளி, தங்கமாரியம்மாள், சிறுவன் கருப்பசாமி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 
3 பேர் காயம் 
உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் காயமடைந்த 3 பேரை நள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்; மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
2. தகராறில் கீழே விழுந்த வாலிபர் சாவு
தகராறில் கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
3. விபத்தில் தொழிலாளி சாவு
திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார்.
4. மொபட் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தன; விவசாயி சாவு
மொபட் மீது கார் மோதியதில் 2 வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
5. தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு
அரசனூரில் தவறி விழுந்து எலக்ட்ரீசியன் இறந்தார்.