பிறந்து 3 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா
பிறந்து 3 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்,
பிறந்து 3 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 30 வயது கர்ப்பிணி, கடந்த மாதம் 16-ந் தேதி கொரோனா தொற்று காரணமாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் 22-ந் தேதி அவருக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டபின் ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் சாத்தூர் கொரோனா சிகிச்சை மையத்தில் 3 நாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பினார்.
குழந்தை பிறந்தது
இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கிருந்த டாக்டர்கள் ஏற்கனவே அந்த பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை பிரசவத்திற்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கடந்த சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், பிறந்த குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் பிறந்து 3 நாட்களே ஆன அந்த குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தீவிர சிகிச்சை
பாதிப்பு ஏற்பட்டுள்ள அந்த குழந்தை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story