போலி பி.எச்.டி. பட்டம் பெற்றதாக திரைப்பட பெண் தயாரிப்பாளர் கைது பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை எடுத்து பிரபலமானவர்


போலி பி.எச்.டி. பட்டம் பெற்றதாக திரைப்பட பெண் தயாரிப்பாளர் கைது பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை எடுத்து பிரபலமானவர்
x
தினத்தந்தி 9 Jun 2021 10:53 AM IST (Updated: 9 Jun 2021 10:53 AM IST)
t-max-icont-min-icon

போலி பி.எச்.டி. பட்டம் பெற்றதாக திரைப்பட பெண் தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர். இவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாறு படத்தை எடுத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் சுவப்னா பட்கர்(வயது39). திரைப்பட தயாரிப்பாளரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு மறைந்த சிவசேனா கட்சி நிறுவன முன்னாள் தலைவர் பால்தாக்கரேவின் வாழ்க்கை வரலாறை மராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்டதில் பிரபலம் ஆனார்.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அவர் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் மனநல பயிற்சியாளராக இருந்து வந்தார். இதற்கான பி.எச்.டி. பட்டம் பெற்று இருப்பதாக சான்றிதழ் சமர்பித்து இருந்தார்.

இந்தநிலையில் சமூக ஆர்வலரான குர்தீப் கவுர்சிங் என்பவர் கடந்த மாதம் 26-ந்தேதி பாந்திரா போலீசில் புகார் ஒன்று அளித்தார். இந்த புகாரில், திரைப்பட தயாரிப்பாளரான சுவப்னா பட்கர் கான்பூரில் உள்ள சத்ரபதி சாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த 2009-ம் ஆண்டு பி.எச்.டி. பட்டத்தை பெற்று உள்ளார். ஆனால் அந்த பட்டம் போலியானது. இதனை வைத்து கொண்டு அவர் ஆஸ்பத்திரியில் கவுரவ ஆலோசகராக இருந்து வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் புகாரில் தெரிவிக்கப்பட்டவை உண்மை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

மேலும் போலி பி.எச்.டி. பட்டம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story