சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் கடந்த 26.05.21 அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மாரியப்பனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாரியப்பனை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
Related Tags :
Next Story