மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி; செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது + "||" + Vaniyambadi; 4 arrested for cell phone hijacking

வாணியம்பாடி; செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

வாணியம்பாடி; செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
வாணியம்பாடியில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் கடந்த 3-ந் ேததி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதி தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது பின்தொடர்ந்து வந்த கும்பல் செல்போனை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியது. அவர்கள் சென்ற இருசக்கர வாகன எண்ணுடன் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பெருமாள்பேட்டை பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்போனை வழிப்பறியில் இழந்த கார்த்திகேயன் புகார்் கொடுத்த மோட்டார்சைக்கிள் வந்தது.

அதில் வந்தவரிடம் விசாரித்தபோது கார்த்திகேயனிடம் தானும் மேலும் 3 பேர் சேர்ந்து செல்போன் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 19), பிரசாந்த் (23), ஆனந்த் (20), மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 4 பேரையும் டவுன் போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது
தூத்துக்குடியில் 3½ டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சாராயம் விற்ற 4 பேர் கைது
சாராயம் விற்ற 4 பேர் கைது
3. ஓடையில் மணல் திருடிய 4 பேர் கைது; 8 பேருக்கு வலைவீச்சு
சாயர்புரம் அருகே ஓடையில் மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
4. கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்