மதுரையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்தது
மதுரையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 15 பேர் பலியான நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. புதிதாக 369 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை,ஜூன்.
மதுரையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 15 பேர் பலியான நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. புதிதாக 369 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் உயிர்பலி குறையவில்லை. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் 29 வயது வாலிபர் ஒருவரும் அடங்குவார். 11 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 4 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1003 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நேற்று ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகளில் 369 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.
காலியாகும் படுக்கைகள்
பாதிப்பு ஒருபுறமிருக்க, நோயில் இருந்து குணமடைந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் காலியாகி வருகின்றன.
நேற்று ஒரே நாளில் 1,255 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 280 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8 ஆயிரத்து 766 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story