மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல் + "||" + so for 1.48 lakh people have been vaccinated against corona in thoothukudi district

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் (கி.ரா) படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கி.ரா.வுக்கு சிலை
எழுத்தாளர் கி.ரா.வின் மறைவை தொடர்ந்து, கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்கப்படும். ஒரு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கடந்த வாரம் கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தோம்.
இடைசெவல் கிராமத்தில் எழுத்தாளர் கி.ரா. படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்க ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதி ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த...
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில், சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய 3 துறைகளும் இணைந்து குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழுக்கள் வீடு வீடாக சென்று, வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள், கொரோனா பரிசோதனை கொடுத்தவர்கள், காய்ச்சல் காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்பவர்கள், தனியார் மருந்தகங் களில் பாராசிட்டமால் மாத்திரைகள் வாங்கு பவர்கள் ஆகியோர் கண்காணிக்கப் படுவார்கள்.
இதே போல், ஊராட்சி மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் 3-க்கும் மேற்பட் டவர்கள் பாதிக்கப் பட்டிருந்தால், அந்த தெருவில் உள்ள அனைவரையும் தினமும் ஆக்சிஜன் அளவு, வெப்ப மானி மூலம் காய்ச்சல் இருக்கிறதா என்பது கண்டறியப் படும். அதையும் தற்போது ஆய்வு செய்துள்ளது.
6 ஆயிரம் தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளைக்கு 6 ஆயிரம் தடுப்பூசிகள் வருவதாக கூறுகின்றனர். ஏற்கெனவே மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து கிராமங் களையும் உள்ளடக்கிய தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 36 குழுக்கள் மூலம் 2 முறை தடுப்பூசி போடப் பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற் பட்டவர்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 8 சதவீதமாக இருந்தது. தற்போது அது 14 சதவீதமாக உயர்ந் துள்ளது. சுகாதார பணியாளர்கள் 90 சதவீதத்துக்கு மேலும், முன்களப் பணியாளர்கள் 85 சதவீதமும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 1.48 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் முகாம்கள் நடத்தப்படும். தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வு காணொளியும் எடுத்துள் ளோம்.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில் இருந்து அரசு ஊழியர்களுக் காக போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப் பட்டு வருகிறது. இதனை பார்வை யிடுவதற்கு மாவட்ட வருவாய் அதிகாரியை கண்காணிப்பு அதிகாரியாக நியமித் துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார் அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.