மாநில அளவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு
மாநில அளவில் 10, 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி:
மாநில அளவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
அதிக மதிப்பெண்
ஒவ்வொரு ஆண்டும் தமிழக போலீஸ் துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அவர்களின் உயர்கல்விக்கும் சிறப்பு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டன.
பாராட்டு
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, போலீஸ் அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் கணேசபெருமாள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story