கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக கொரோனாவை விரட்ட குறிசொல்லும் நவீன கருப்பசாமி என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறுநாடகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தாதனேந்தல் ஊராட்சியை சேர்ந்த சினிமா நடிகர் ராஜேந்திரன் தலைமையிலான கலைக்குழுவினர் நாடகத்தை நடத்தினர். நிகழ்ச்சியை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இது போன்ற விழிப்புணர்வு பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், சப்-கலெக்டர் சுகபுத்ரா, துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story