அரக்கோணம்; ஜாமீனில் வந்தவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
அரக்கோணத்தில் ஜாமீனில் வந்தவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த கார்த்தி என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொைலயில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர்.
இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இருவரும், அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள கலைவாணர் தெருவைச் சேர்ந்த பரசுராமன் என்றும், சுப்பராயன் தெருவைச் சோர்ந்த ஷோபன் என்றும் தெரிய வந்தது.
அவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story