ஆத்தூர் விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா


ஆத்தூர் விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
x
தினத்தந்தி 9 Jun 2021 9:53 PM IST (Updated: 9 Jun 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் விநாயகர் கோவிலில் மண்டாபிஷேக விழா நடைபெற்றது

ஆறுமுகநேரி:
ஆத்தூர் சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி (தீர்த்தக்கரை) தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. அதன் நிறைவு விழாவான நேற்று காலையில் மண்டலாபிஷேக நிறைவு விழா தொடங்கியது. காலையில் கணபதி ஹோமமும், தொடர்ந்து கலச பூஜையும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.கொரோனா காலம் என்பதால் விழாவில் பக்தர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. வேத விற்பன்னர்கள் மட்டும் கலந்து கொண்டு விழாவை நடத்தினர். 

Next Story