மாவட்ட செய்திகள்

கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் + "||" + corona

கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்

கிராம மக்களுக்கு கபசுர குடிநீர்
கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது ஊராட்சி மன்ற சார்பில் கிராம பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஊராட்சி தலைவர் சம்சாத் பேகம் முகமது ரபிக் தலைமை தாங்கினார். 
ஆணையாளர் அன்பு கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மருத்துவர் கமல்நாத், இளஞ்செம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் முத்துலட்சுமி அனைவரையும் வரவேற்றார். 
இதில் மேலச்சிறுபோது ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் அனை வருக்கும் கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அலுவலர் தனவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.