மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே; ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலி + "||" + Near Arakkonam; 3 spotted deer hit by train

அரக்கோணம் அருகே; ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலி

அரக்கோணம் அருகே; ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் பலி
அரக்கோணம் அருகே ரெயிலில் அடிபட்டு 3 புள்ளிமான்கள் உயிரிழந்தன.
அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-திருப்பதி ரெயில் மார்க்கத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் 3 புள்ளி மான்கள் தண்ணீர் தேடி வந்த போது ரெயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகே இறந்து கிடந்தன.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று இறந்து கிடந்த 3 புள்ளிமான்களின் உடலையும் மீட்டனர்.

  அதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் இறந்த 3 மான்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். 

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், மான்கள் ரெயிலில் சிக்கி பலியாவதை தடுக்கும் வகையில் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.