கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 321 பேர் `டிஸ்சார்ஜ்'
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 321 பேர் `டிஸ்சார்ஜ்' ஆகினர்.
புதுக்கோட்டை, ஜூன்.10-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 321 பேர் `டிஸ்சார்ஜ்' ஆகினர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று பரவலாக இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரேனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து998 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் நேற்று ஒரே நாளில் 321 பேர் `டிஸ்சார்ஜ்' ஆகினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து597 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 251 ஆக உள்ளது.
அரிமளம்-ஆதனக்கோட்டை
அரிமளம் ஒன்றியம் ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கடியாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 பேருக்கும், கே.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 4 பேருக்கும், அரிமளம், ராயவரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரம் முள்ளூர் தண்ணீர் பந்தல் மேட்டைச்சேர்ந்த 63 வயது மூதாட்டி கொரோனாவுக்கு உயிரிழந்தார். மேலும் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்த நிலையில் 390 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story