320 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு
320 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு ஒப்படைக்கப்படுமா
குடிமங்கலம்
உடுமலை நகராட்சிக்குட்பட்ட நீரோடைகளின் கரையோரங்களில் வீடுகள் கட்டி வசித்தவர்களின் வீடுகள் அகற்றப்பட்டன. வீடுகளை இழந்தவர்களுக்கு புக்குளம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புக்குளத்தில் ரூ.27 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.
இங்கு தரைதளத்துடன் 3 மாடிகளுடன் பிளாக்கிற்கு 32 வீடுகள் வீதம் 10 பிளாக்குகளில் 320 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீடும் படுக்கை அறை, சமையலறை, கழிவறை மற்றும் பால்கனியுடன் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளும் 400 சதுர அடி பரப்பளவில் தலா ரூ.8½ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. வீடுகள் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திறப்பு விழா நடைபெற்றது. கடந்த 4 மாதங்கள் ஆகியும் இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. வீடுகளை இழந்தவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக வீடுகள் இல்லாத நிலையில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை உடனடியாக பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story