மாவட்ட செய்திகள்

பிச்சைக்கட்டளை கிராமத்தில் மரம் விழுந்து வீடு சேதம் + "||" + Damage to house by falling tree in begging village

பிச்சைக்கட்டளை கிராமத்தில் மரம் விழுந்து வீடு சேதம்

பிச்சைக்கட்டளை கிராமத்தில் மரம் விழுந்து வீடு சேதம்
திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சைக்கட்டளை கிராமத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கூரை வீட்டின் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
திருக்கடையூர்:

காற்றுடன் பலத்த மழை
திருக்கடையூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சூறைக்காற்றுடன்  இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின.
இந்தநிலையில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சைக் கட்டளை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். 
வீட்டின் மீது மரம் விழுந்தது
நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த சூறை காற்றுடன் கூடிய மழையால் வீட்டின் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது.
மேலும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த பீரோ மீது மரம் விழுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.