மின்னல் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு


மின்னல் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 9 Jun 2021 11:02 PM IST (Updated: 9 Jun 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் இறந்தார்.

தேவகோட்டை,

காரைக்குடி பள்ளத்தூர் வீரமுத்துபுரத்தை சேர்ந்தவர் கண்ணதாசன்.(வயது 40). கோழிபண்ணை உரிமையாளர். இவர் தனது கோழிப்பண்ணைக்கு நெல் வாங்குவதற்காக நேற்று முன்தினம் கண்ணங்குடி அருகே தேவன்டதாவு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சாலையில் சென்ற போது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் பலியானார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி பலியான கண்ணதாசனுக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Tags :
Next Story