வாகன சோதனை தீவிரம்


வாகன சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:11 PM IST (Updated: 9 Jun 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனை தீவிரம்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து வர இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினருடன் இணைந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில் நேற்று மாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடிக்கு கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மருத்துவம் உள்பட அவசர காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே நீலகிரிக்கு வர அனுமதி வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

Next Story