தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை


தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 11:11 PM IST (Updated: 9 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

வடகாடு, ஜூன்.10-
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளன. கஜா புயலில் இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் விழுந்தன. புயலில் தப்பி பிழைத்த ஒன்றிரண்டு தென்னை மரங்கள் தற்போது பலன் தருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழா தடை, வாரச்சந்தைகளுக்கு தடை, பஸ்கள் இயங்க தடை போன்ற காரணங்களால் தேங்காய்களை விற்கமுடியவில்லை. இதனால் தேங்காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். ஒரு சில விவசாயிகள் தங்களது தென்னை மரங்களில் இருந்து தானாக விழுந்த தேங்காய்களை எடுத்து உடைத்து காயவைத்து வருகின்றனர்.  பின்னர் தேங்காய் பருப்பை எடுத்து, மரச்செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து தங்களது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்
எனவே தேங்காய்களை பறித்து விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்காக இப்பகுதியில் அரசு தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story