கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:13 PM IST (Updated: 9 Jun 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி பர்மா காலனி பகுதி கடைகளில் நேற்று மாலை தாசில்தார் அந்தோணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் மல்லிகாஅர்ஜூன், வருவாய் ஆய்வாளர் மெகர்அலி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கடைகள் இயங்குவது தெரியவந்தது.
மேலும் அந்த பகுதியில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் முக கவசம் அணியாமல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டதும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருந்து கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் அந்த பகுதியில் பர்னிச்சர் கடையில் போதிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக ரூ.500-ம், சுவீட்ஸ் கடையில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரூ.500-ம், மற்ற கடையில் முக கவசம் அணியாமல் பணியில் இருந்த பெட்டிக்கடை உரிமையாளர்களுக்கு ரூ.200-ம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story