ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:16 PM IST (Updated: 9 Jun 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

ஊக்கத்தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கீரமங்கலம், ஜூன்.10-
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு தரமான முககவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் சீருடையுடன் கலந்து கொண்டு கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக 14 பெண்கள் உள்பட 17 பேர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story